559. நீர் மேலாண்மை -1 - கி அ அ அனானி
ஒரு பிரேக்குக்கு அப்றம் கி.அ.அ.அனானியிடமிருந்து மெயிலில் மேட்டர் வந்தது! ஆஹா, இப்ப நடக்கிற பார்ப்பனீயம் / சங்கம் "டமால்-டுமீல்" பத்தி தன் கருத்துகளை தான் அனுப்பியிருப்பார்னு நினைச்சு, ஆவலா மெயிலைத் திறந்தா, கி.அ.அ.அ-வும் வேஸ்ட் பார்ட்டி ஆயிட்டார்னு புரிந்தது ;-) ஏதோ (அவருக்கு துளியும் ஒவ்வாத!) அறிவுஜீவி லெவலில், நீர் மேலாண்மை (அது என்ன எழவோ :-)) பத்தி நீ.......................ளமா மேட்டர் அனுப்பியிருக்கார்!
3 இடுகைகளாத் தான் போட முடியும்னு நினைக்கிறேன். கி.அ.அ.அ-யிடமிருந்து இந்த மாதிரி சப்பை இடுகை வருவது, பரந்து விரிந்திருக்கும் அவர் வாசகர் வட்டத்துக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம் ;-) இருந்தாலும், Considering கி.அ.அ.அ's glorious past in terms of material he has sent earlier to me for publishing in my blog, I am unable to say "No" to publish this matter, இந்த மாதிரி "அறிவுஜீவி" வேஷம் அவர் போட முனைவது சரியில்லை என்றாலும் :-) விரைவிலேயே அவர் தன்னிலை உணர்ந்து, அதற்கேற்றவாறு, "அவல்" வகை மேட்டரை எழுதி அனுப்புவார் என்று (உங்களைப் போலவே) நான் எதிர்பார்க்கிறேன்!
Over to கி அ அ அனானி.
**********************************************
நீர் மேலாண்மை - Part 1 - By கி அ அ அனானி
சில நாட்களுக்கு முன் ஹிந்து ஆங்கில நாளிதழில் பான்ஜிபாய் மதூக்கியா என்கின்ற குஜராத் விவசாயி பற்றிய கட்டுரை வாசிக்க நேர்ந்தது.அப்படி என்ன செய்து விட்டார் குஜராத்தின் மிகவும் வரண்ட மாவட்டமான ஜுனாகாத்தின் காலாவாட் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த விவசாயி. அதிகமில்லை நண்பர்களே.வரண்ட ஜுனாகாத் கிணறுகளில் நீர் தளும்பச் செய்திருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.
ஒரு சில வருடங்களுக்கு முன்னால் ஜுனாகாத் மாவட்டத்தில் பல விவசாயிகள் கடும் வரட்சி காரணமாக வாழ்வாதாரமான விவசாயத்தையே கை விடும் படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இன்றோ பெருவாரியான கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பயமின்றி விவசாயிகள் தங்களது பயிர்களை வளர்க்க முடிகிறது.பான்ஜி பாய் என்கின்ற ஒரு விவசாயி கட்டிய சிறு சிறு தடுப்பணைகள் மூலம் இந்த நிலை சாத்தியமாகி இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
இது பான்ஜிபாய் மதூக்கியா, கி.அ.அ.அ இல்லை!
இந்த விவசாயி முதலில் தனது கிராமத்தில் ஓடும் சிறு ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார்.இந்தத் தடுப்பணை தண்ணீரின் எடையைத் தாங்குமாறு கீழே பல அரை வட்ட வடிவ வளைவுகளைக் கொண்டுள்ளது (எப்படி ரயில்வே பாலங்களில் ஓடும் ரயிலின் எடையைத் தாங்கும் படி வடிவமைக்கப் பட்டிருக்குமோ அது மாதிரி.) இந்த தடுப்பணை கட்ட சாதாரணமாக கட்டப்படும் தடுப்பணையை விட குறைந்த செலவு
ஆவது மட்டுமல்லாமல் சாதாரண அணைகளை விட திடமானதாகவும் கட்ட எளிதானதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் பிரத்தியேக வடிவமைப்பினால் அதிக தண்ணீர் அழுத்தத்தையும் நீரின் ஓட்டத்தையும் தடுக்கும் படியும் இருக்கிறதாம்.
இந்தத் தடுப்பணை கட்ட பான்ஜிபாய் கிராமத்தில் சும்மா கிடக்கும் கற்களை பயன்படுத்தியிருக்கிறார்,சீரான இடைவெளியுடன் கற்களை வைத்து இடை வெளியை நிரப்ப ஆற்று மணலையும், சிறு கற்களையும் சிமென்ட்டையுமே பயன் படுத்தியிருக்கிறார்.ஒரு தடுப்பணை கட்ட கூலியும் சேர்த்து மொத்த செலவே 10000 ரூபாய்க்குள்தான் என்பது வியப்பிலாழ்த்துகிறது. இந்த முதல் தடுப்பணை கட்டப்பட்ட பின் அதன் பலனைப் பாத்த கிராமத்து விவசாயிகள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் மேலும் பல தடுப்பணைகளை கட்டச் சொல்லி இவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால் மேலும் அவர் இரண்டு தடுப்பணைகளை இதே ஆற்றின் குறுக்கே கட்டியுள்ளார்.இது வரை பான்ஜிபாய் குஜராத்திலும் ராஜஸ்தானத்திலுமாக 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார் என்பது நம்மை வாய் பிளக்க வைக்கிறது.
இந்த தடுப்பணைகளைப் பற்றி சொல்லும் போது பான்ஜிபாய் "ஒரு சிறு தடுப்பணை கட்டுவதென்றால் கிட்டத்தட்ட 50000 முதல் 100000 வரை செலவாகும். ஆனால் நான் 10000 மட்டுமே செலவழித்தேன். இங்கு ஓடும் பெருவாரியான ஆறுகள் வற்றாத ஆறுகள் இல்லை என்பதால் இந்த தடுப்பணைகள் ஆற்று உபரி நீர் ஓடி விரயமாவதைத் தடுக்கிறது. மழைக்காலம் முடிந்த உடன் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆறுகளுக்கு அடுத்த படியான முக்கிய நீராதாரங்கள் கிணறுகள் தான்.
மழைக்காலம் முடிந்தால் கிணற்று நீர் மட்டமும் குறைந்து விடுகிறது. இந்தத் தடுப்பணை உபரியாக ஓடும் நீரைத் தடுப்பதுடனல்லாது கிணற்று நீர் அளவையும் உயர்த்தி விடுகிறது" என்கிறார்.
பான்ஜிபாயின் இத்தகைய தடுப்பணைகளை கட்ட அதிகம் செலவாகாது என்பதால் அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்க்காமல் தனி நபர்களோஅல்லது சிறு குழுக்களோ கூட எளிதாக செயல் படுத்தி விடலாம்.இந்த முறை இந்தியாவெங்கும் பயன் படுத்தப் பட்டால் கிராம சிறு விவசாயம் பெரும் நன்மையடையும் என்பதோடு மட்டுமல்லாது இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கே உதவியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பான்ஜிபாய் போன்ற அனுபவ இயற்கை விஞ்ஞானிகள் நமது கிராமப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு போன்றவர்கள் என்றால் அது மிகையில்லை.
வற்றாத நதிகள் இல்லாத நமது தமிழகத்திலும் இது போன்ற சிறு சிறு முயற்ச்சிகளை செயல்படுத்தினாலே விவசாயத்தில் முன்னேற்றம் காணலாம் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் அந்தக் காலத்தில் செயல் படுத்தப் பட்ட நீர் மேலாண்மை மற்றும் எனது கருத்துக்கள் பற்றி அடுத்த பதிவில் :)
கி அ அ அனானி
செய்தி மற்றும் படம்: நன்றி. ஹிந்து நாளிதழ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
8 மறுமொழிகள்:
test !
இயற்கை சார்ந்த விசயங்களில் தனிநபர்களின் ஈடுபாடு அதனால் உண்டாகின்ற வெற்றிகள் மேலும் பலரிடம் ஆர்வத்தினை உண்டாக்கும்!
இது போன்ற தடுப்பணைகள் - [check dam] தமிழகத்திலும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் பெருவாரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன! [அரசின் பணத்திலிருந்து கொஞ்சமாக ஆள்பவர்களுக்கு செல்லும் சேனல் - இது போன்ற check damகளும் channel வேலைகளிலிருந்தும்தான்] கொஞ்ச காலம் இந்த துறையில் பணி புரிந்த அனுபவம் :)
மலைப்பாங்கான பகுதிகளில் இது போன்ற முறைகள் வெற்றிப்பெற்றிருந்தாலும் நம் காவிரி டெல்டா போன்ற பகுதிகளில் பல குறைகளோடு இன்னமும் அதிக அளவு மழை நீர் பெற்று கடலுக்கு வழியனுப்பி வைத்துதான் கொண்டிருக்கிறோம் + நீர் மட்டுமின்றி பொருள் இழப்புகளோடும்...!
மேலும் இரு பகுதிகளை கி.அ.அ.அவிடமிருந்து ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன்!
நல்ல பகிர்வு. எல்லா இடத்துலயும் இதுமாதிரி செஞ்சா நல்லாருக்கும்.
நன்றி கி அ அ அனானி:-)
//மேலும் இரு பகுதிகளை கி.அ.அ.அவிடமிருந்து ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன்!
//
நானும்
அன்புடன் பாலா
வழக்கம் போல் பதிவைப் பதிப்பித்தமைக்கு நன்றி
///"அவல்" வகை மேட்டரை எழுதி அனுப்புவார் என்று (உங்களைப் போலவே) நான் எதிர்பார்க்கிறேன்!///
மூன்றாம் பகுதியில் கொஞம் அவல் உண்டு
கி அ அ அனானி
ஆயில்யன்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
இது நான் சார்ந்த துறை இல்லை.ஆனால் நதிகள் ,நீர் வளம் ,water management எல்லாம் எப்பொழுதுமே எனக்கு பிடித்தமான விஷயங்கள். சிறு வயது முதலே தண்ணீர் கஷ்டத்தில் வாழ்ந்ததால் இருக்கலாம் :)
பாருங்கள்..சென்னை சுகவாசி எ அ பாலா நீர் மேலாண்மை என்றால் என்ன எழவோ என்கிறார் :)
பதிவுகளில் தவறிருந்தால் சுட்டவும்.மேலும் பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். இது பதிவினை மெறுகூட்டும்.
நன்றி
கி அ அ அனானி
கபீஷ்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
கி அ அ அனானி
neermelanmayathin avasiyathai arasum makkaium puritnthu kollavittal sothukku singi adippom yenbathu nichyam
Post a Comment